பாடசாலை சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் திடீரென தரையில் விழுந்து உயிரிழப்பு

சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹட்டன்(hatton) பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நோர்டன்பிரிட்ஜ் ஒஸ்போர்ன் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய அங்கமுத்து தயாபரன் (வயது 45) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

திடீரென நெஞ்சு வலி 

பாடசாலையில் இன்று(12) நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் பங்கேற்று கொண்டிருந்த போது, ​​திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்து ஆசிரியர் தரையில் விழுந்தார்.

பாடசாலை சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் திடீரென தரையில் விழுந்து உயிரிழப்பு | Teacher Participating Saraswati Puja Has Died

உடனடியாக ஆசிரியர் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களால் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *