இஸ்ரேலின் (Israel) வான்வழி தாக்குதலில் லெபனானின் வடபகுதியில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் (Lebanon) சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் கிறிஸ்தவ மக்கள் வாழும் ஐடூ கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்த தாக்குதல்  (14) ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 வான்வழி தாக்குதல்

ஆனால், இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் உரையாற்றும்போது பெஞ்சமின் நெதன்யாகு, “லெபனானில் ஹிஸ்புல்லாவை எந்தச் சலனமும் இல்லாமல் தொடர்ச்சியாகத் தாக்குவோம்.

இஸ்ரேலின் அதிரடியான வான்வழி தாக்குதல்: லெபனானில் 21 பேர் பலி | Lebanon Says 21 Killed In Air Strike In Israel

அனைத்து நடவடிக்கைகளும் செயல்பாட்டு கருத்துகளின்படி நடைபெறுகின்றன. இதை நாங்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளோம், இதையும் தொடர்ந்து நிரூபிப்போம்.” என்று தெரிவித்த பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு காசா போரால் தூண்டப்பட்ட இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான கடும்போரில் இது ஹிஸ்புல்லா மேற்கொண்ட கொடிய தாக்குதல்களில் ஒன்றாகும்.

லெபனானின் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த மாதம் இருந்து நடந்த இஸ்ரேலின் தாக்குதல்களில் 1,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments