காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!

மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (15) மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​காரில் வந்த நபர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | One Person Shot Killed In Shooting In Matara

உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காரில் வந்து முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | One Person Shot Killed In Shooting In Matara

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மாத்தறை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் “வாகனக் கைப்பற்றுபவராக” செயற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments