உரத்த குரலில் கூறியது போல் அநுரகுமார திஸாநாயக்க தனது வேலையை எப்படி காட்டுவார் என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதாக திர்கட்சியின் பிரதான அமைப்பாளர் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரி எல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின்னர் ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இதுவரையான காலத்தில் அநுர தரப்பினர் ஏனைய கட்சியினரை விமர்சித்து மட்டுமே வந்ததாகவும் கிரி எல்ல கூறியுள்ளார்
வன்முறை
இதேவேளை, யார் என்ன சொன்னாலும் மக்களின் கருத்துக்கு தலைவணங்குவதாக தெரிவித்த கிரி எல்ல, அநுர திஸாநாயக்க, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு நாட்டில் வன்முறை இல்லாத அமைதியான சூழல் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.