அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கைபுதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர் முன்வர வேண்டும் எனவும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (23.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவி ஏற்கின்றார். அவருக்கு வேட்பாளர் என்ற சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏமாற்றம்

நாடாளுமன்ற தேர்தல்

பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து புது வேட்பாளராக என்னை நிறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவனைப் பற்றி இரண்டு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கை | Ariyanethran S Request To Anura Kumara

அதனடிப்படையில் என்றும் இல்லாதவரை இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்கின்ற வகையில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழ் தேசியம் தொடர்ச்சியாக இறுதிப்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

அதில் இரண்டாவதாக நாங்கள் பார்க்க வேண்டி இருப்பது இணைந்த வடக்கு கிழக்கில் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். இணைந்த வடக்கு கிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.

அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கை | Ariyanethran S Request To Anura Kumara

ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரசாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு அணியில் ஒரு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Gallery

GalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments