யாழில் தனியார் பேருந்து சாரதி மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்குதல்கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(23.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்ற தனியார் பேருந்தின் சாரதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதல் சம்பவம்

கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11ஆவது குறுக்கு வீதியில் நிறுத்தி, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிய நிலையில் வந்த நபர்கள் பேருந்தின் சாரதியை கூரிய ஆயுதத்தினால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த பேருந்தின் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 05 நாட்களுக்கு முன்னர் யாழ். பேருந்து நிலையத்தில் சில யுவதிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் 04 இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.

இந்நிலையில்,மேற்படி தாக்குதலுக்கு இலக்கான சாரதி , சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் தனியார் பேருந்து சாரதி மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்குதல் | Attack On Private Bus Driver In Jaffna

இதன்படி குறித்த இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாக காயமடைந்தவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிடுவதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments