முதலில் அந்த நாட்டின் தமிழர்களை நேசி என்பதே அதின் கருத்து,
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்கள் என பலரும் புதிய ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் இணைந்து பயணிப்பதற்கான ஆதரவு கரங்களையும் நீட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தமிழில் தனது வாழ்த்துக்களை புதிய ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இணைந்து பயணிப்போம்
இது தொடர்பில் தனது முகநூல் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில்,
அன்புள்ள இலங்கை நண்பர்களே, உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது.
அநுர திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்! இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது.
நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.