யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த 70 வயதான வைரமுத்து முருகையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் யாழிலிருந்து, அராலியில் உள்ள தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்தவேளை கல்லூண்டாய் பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து, மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததனால் வைத்தியசாலையால் அவருக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையில் இருந்து கடந்த 20ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கை வெளியீடு!
இவ்வாறான நிலையில் இன்றையதினம் (25-09-2024) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது