எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அநுரகுமார திஸாநாயக்கவின் நடத்தை மற்றும் அவரது அறிக்கைகளின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பலம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக தாம் நம்புவதாக திஸாநாயக்க கூறியுள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என தாம் நம்புவதாகத் தெரிவித்த திஸாநாயக்க, பொதுத் தேர்தலில் தேர்தல் வெற்றி என்பது ஏனைய கட்சிகளுக்கு கடினமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிகரமான ஜனாதிபதி

இந்தநிலையில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒரு சிறிய அமைச்சரவையை நியமித்து, அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக அநுரகுமார இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறவுள்ள கட்சி தொடர்பாக வெளியான கணிப்பு | Predictions About Parliament Election

இந்த அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி குறைந்தது 6.5 மில்லியன் வாக்குகளைப் பெறும் என்று திஸாநாயக்க கணித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments