யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிகிச்சை பலனின்றி நேற்று (25.9.2024) புதன்கிழமை இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

1 ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது – 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் – பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டது.

]

இந்நிலையில் அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (25) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.  சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments