2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் கட்சிகள் பிளவுப்பட்டு செயற்படுவது பாரிய ஒரு பிழை என யாழ்.பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, தம்முடைய தமிழ் அரசியல் கட்சிகள் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த விதங்களும் முற்றாக பிழை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இனவாதத்தை தூண்டி விட்டு அரசியல் பேசி தங்களுக்கான நலன்களை மாத்திரமே தமிழ் அரசியல் கட்சியினர் எடுத்துக் கொண்டதாகவும் மக்களுக்கான எந்தவொரு அடிப்படை தேவை பற்றியும் கூட அவர்கள் சிந்திக்கவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பிளவுக்கு அக்கட்சியின் உள்ளக பிரச்சினைகளே காரணம் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடுகளை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் மக்கள் கருத்துக்களை கொண்ட ஒளியாவனம்…