இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி வைத்தியசாலையில்!கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் இந்துரானை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிட்டம்புவையில் இருந்து ருவன்வெல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் வலதுபுறம் உள்ள பக்க வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதியான தாய், 4 வயது சிறுவன் மற்றும் 10 சிறுமி ஆகியோர் கொனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 10 வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.