தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12இல் களமிறங்கியிருக்கும் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு  பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், நேற்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருடைய உறவினர் மற்றும் ஆதரவாளரால் “வீடு தேடிவந்து தாக்குவோம்” என அச்சுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருடைய வாகனம் இன்றையதினம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டதாகவும் அதனை குறித்த கருத்துக்களை மக்களிடம் கூறுவதாக கூறியே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளியவளையில் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை | Candidate Was Threatened With Death Mulliyavalli

மேலும். இந்த குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *