வட மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அமெரிக்க சார்பு நாடான சாடில்(Chad) உள்ள இராணுவ தளத்தின் மீது ஜிஹாதிஸ்ட்(jihadist) அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தமி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் நேற்று(28.10.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மஹாமத் இட்ரிஸ் டெபி இட்னோ,  சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜிஹாதிஸ்ட் அமைப்பு

தாக்குதலை மேற்கொண்ட ஜிஹாதிஸ்ட் அமைப்பின் போகோ ஹராம் உறுப்பினர்கள் சாடின் காரிஸனைக் கைப்பற்றியதோடு, ஆயுதங்களைக் கைப்பற்றி, கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை எரித்துவிட்டு வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க சார்பு நாட்டை இலக்குவைத்த ஜிஹாதிஸ் குழு: 40 இராணுவ வீரர்கள் பலி | 40 Killed In Attack On Chad Military Base

ஜிஹாதி கிளர்ச்சி குழு ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது வழக்கமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஜிஹாதி கிளர்ச்சி குழு 2009 இல் நைஜீரியாவில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. 40,000 க்கும் அதிகமான மக்கள் இதில் கொல்லப்பட்டனர். மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா

பின்னர் இந்த அமைப்பு அண்டை நாடுகளுக்கும் பரவியது. மார்ச் 2020 இல்,போஹோமா தீபகற்பத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 100 இராணுவ வீரர்கள் இறந்தபோது, ​​சாடியன் இராணுவம் பிராந்தியத்தில் அதன் மிகப்பெரிய  இழப்பை சந்தித்தது.

அமெரிக்க சார்பு நாட்டை இலக்குவைத்த ஜிஹாதிஸ் குழு: 40 இராணுவ வீரர்கள் பலி | 40 Killed In Attack On Chad Military Base

இந்த தாக்குதல் அப்போதைய ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோவினால், ஜிஹாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்க தூண்டியது.

அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக்கு ஆதரவான அமைப்புகளின் மையமாக மாறியுள்ள ஜிஹாதிகளை எதிர்த்துப் போராட சாட் இராணுவம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகளுடன் கூட்டினைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments