யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்; நள்ளிரவில் அடித்துடைக்கப்பட்ட வீடு | Gang Violence Rampant In Jaffna Manipay

  யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்; நள்ளிரவில் அடித்துடைக்கப்பட்ட வீடு

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,  இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

எனினும் சம்பவம் இடம்பெற்றமைக்கான  காரணம் வெளியாகவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments