முல்லைத்தீவு – நட்டாங்கண்டலில் உள்ள மாந்தை கிழக்கு 3 முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (28.10.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | Family Man Was Killed Elephant Attack Mullaitivu

சம்பவத்தில் வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *