சில அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் தங்களின் கட்சி பற்றி பொய்யான தகவல்ளை பரப்பி வருவதாக அநுர குமார திசாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு 2/3 பெரும்பாண்மை கிடைக்கும் என ஜேவிபி நம்புகின்றது.

தமிழர் பகுதிக்குள் இயங்கும் அரச நிர்வாகத்திற்குள்ளும் ஜேவிபின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தேர்தல் பரப்புரைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்து அநுர குமார தரப்பு பின்வாங்குவதாக எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இலங்கையின் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் சமகால சவால்கள் நாலாபுறமும் வீரியமெடுத்துள்ளன.

யாரை நம்புவது என்ற கையறுநிலை ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பை நெருக்குகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை தாங்கி வருகின்றது இன்றைய செய்தி வீச்சு…

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *