லா ரவிராஜ் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் எமது ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரிப் பிரதேசத்தில், இன்று (05) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, சாவகச்சேரி தமிழரசுக்கட்சியினரே தன்மீது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
தமிழரசுக்கட்சிக்கு எதிராக முறைப்பாடு
இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளததாகவும், இது தொடர்பாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த சசிக்கலா, தாக்குதலில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தென்மராட்சி இலங்கை தமிழரசுக்கட்சி சாவகச்சேரி கிளைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்