டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசுஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் முன்னாள் அமை்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு( தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கும் எண்ணம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) நேற்று (08) யாழில் தெரிவித்தார்.

 தேவானந்தா மட்டுமல்ல கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)அல்லது ரணில் (ranil)தலைமையிலான அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்து நாட்டை அழித்த எவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கும் எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு வடமாகாண மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம்

தேவானந்தா ஜனாதிபதியை சந்திக்க அவகாசம் கேட்டார். முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி.யாக இருந்த ஒருவர் ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது அரசியல் தார்மீகமாகும். தேவானந்தா ஜனாதிபதியை சந்தித்த போது ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை எடுத்து வடநாட்டுப் பத்திரிகைகளில் வெளியிட்டார். முகநூலில் பதிவிட்டுள்ளார்.

டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசு | Douglas Has No Ministerial Position Government

டக்ளஸ் தேவானந்தாவை நினைத்து வெட்கப்படுகிறோம்

அவருக்கு ஜனாதிபதி உதவி செய்வதாக பெரும் விளம்பரம் செய்தார். தான் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த போது அமைச்சுப் பணிகளைப் பற்றி ஜனாதிபதியிடம் பேசியதாக மக்களிடம் பொய் கூறினார். டக்ளஸ் தேவானந்தாவை நினைத்து வெட்கப்படுகிறோம். இப்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இணைவேன் என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதிக்கோ எமக்கோ அதிகாரம் இல்லை. இந்தப் பொய் முடிவுக்கு வரும் என்று காத்திருந்தோம்.

டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசு | Douglas Has No Ministerial Position Government

டக்ளஸும் அவருடைய அடியாட்களும் இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்கிறார்கள். ராஜபக்சவுடன் சேர்ந்து நாட்டை அழித்த அமைச்சர்களும் இருக்கிறார்கள். ராஜபக்ச, விக்ரமசிங்க, மைத்திரிபாலவுடன் இணைந்து வடக்கை அழித்தது யார்? தேவானந்தா இலங்கையை அழித்த அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினர். டக்ளஸ் தேவானந்தா கடந்த தேர்தலில் ணிலுக்கு உதவினார்.

ரிஷாத் பதுயுதீனும்(Rishad Bathiudeen)இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். அவரிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அவரும் ராஜபக்ச காலத்தில் அமைச்சராகவும் இருந்தவர்.

டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசு | Douglas Has No Ministerial Position Government

சுமந்திரனின்(sumanthiran) ஆதரவாளர்களும் சிறீதரனின்(sritharan) ஆதரவாளர்களும் இதையே செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஏழை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கேட்கிறார்கள். வெற்றி பெற்றால் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று வாக்கு கேட்பார்கள். நீங்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தால், மற்றவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? திசைகாட்டி என்பது திசைகாட்டி தவிர வேறில்லை. அமைச்சர்களும் ஒரே திசைகாட்டி உள்ளவர்களாக இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments