நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய  மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது.

இதுவரை வெளியான களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின்  தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தி 76 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி வெறும் 11 வீத தபால் வாக்குகளையே குறித்த மூன்று மாவட்டங்களிலும் பெற்றுக் கொண்டுள்ளது.

ரணில் பின்னடைவு

முன்னாள் ஜனாதிபதி ரணில்(Ranil Wickremesinghe) ஆதரவு அணியான புதிய ஜனநாயக முன்னணி 5.3 வீத வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Sri Lanka General Election 2024

நான்காவது இடத்தில் பொதுஜன பெரமுண கட்சியும், ஐந்தாவது இடத்தில் திலித் ஜயவீரவின் சர்வஜன அதிகாரக் கட்சியும் உள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments