பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

இது வழக்கத்திற்கு மாறான ஆணை என்றும், இதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கனேடிய தமிழ் சங்கத்தின் இனவாதம்

கனேடியதமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மீண்டும் இனவாத, மதவாத, பிரிவினைவாதக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, ஐக்கிய நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல் | People Of The North Dislike Racism And Separatism

அரசாங்கம் வழி தவறினால் நடக்கப்போகும் சம்பவம்

இந்த ஆணையின் மூலம் பொருளாதார நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு நியாயமான நாள் அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல் | People Of The North Dislike Racism And Separatism

அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் மக்களைத் திரட்டி அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதே தேசிய சுதந்திர முன்னணியின் வகிபாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments