தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானும் (Seeman) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல்

இதனடிப்படையில், மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக சென்னையில் (Chennai) நேற்று (27) கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் நாள் : அஞ்சலி செலுத்திய சீமான் | Semaan Speech About Maaveerar Day Sri Lanka

இதன் போது, மாவீரல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து எழுச்சியுரையொன்றை ஆற்றியதுடன் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பதிவொன்றை நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் (Vijay) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments