ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் ஒருவரின் தாய் கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினம் நேற்றிலிருந்து  (27) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு தேசத்திற்காய் உயிர் நீத்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலித்து வருகின்றனர்.

மாவீரரின் தாய்

இந்தநிலையில், மல்லாவி – ஆலங்குளம் துயிலுமில்லத்திலும் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்  மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தாய்மொழியனின், தாயார் கோ.சரஸ்வதி பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்து ஈகைச் சுடரினை ஏற்றிய அவர் அங்கு கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கதறி அழுத மாவீரரின் தாய் : காண்போரை கண்கலங்க வைத்த காட்சி | Maaveerar Day Celebration In Alankulam

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments