யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம்  நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்! | Jaffna Car Crashes Into Motorbike Govt Officer Die

குறித்த சம்பவத்தில் மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய அன்னலிங்கம் செந்தில்குமரேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்! | Jaffna Car Crashes Into Motorbike Govt Officer Die

இதன்பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி, குறித்த இடத்திற்கு வருகை தந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நோயாளரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்! | Jaffna Car Crashes Into Motorbike Govt Officer Die

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments