அவுஸ்திரேலியாவில்(australia) எதிர்வரும் ஜனவரி  தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு அந்நாட்டு எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன்(Andrew Charlton) நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதை இலங்கைத் தமிழரான எம்பி மிச்செல் ஆனந்த ராஜா (Michelle Ananda-Rajah)வரவேற்றுள்ளார்.

நான்கு நாட்கள் அறுவடை கொண்டாட்டம்

ஜனவரி மாதத்தில் குறிப்பாக தமிழர்கள் தைப்பொங்கல் கொண்டாடுவதைக் குறிப்பிட்ட அவர், ”சூரியன், நிலம், மழை, விவசாயம் போன்றவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் அறுவடை நாள்களாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் மூலம், நெறிமுறைகள், நிர்வாகம், மனித விழுமியங்களின் மதிப்பு குறித்து மக்களை சிந்திக்கத் தூண்டும் திருக்குறள் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களையும் இது அங்கீகரிக்க உதவும்.

இலங்கைத் தமிழர் வரவேற்பு

மேலும், தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுவது உள்ளூர் வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும்” என்று அவர்  நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆண்ட்ரூ சார்ல்டன் முன்மொழிந்ததை வரவேற்ற பூர்வீக இலங்கைத் தமிழரான எம்பி மிச்செல் ஆனந்த ராஜா, “இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் தங்களின் பாரம்பரியத்தைக் கொண்டாட உதவும்” என்று கூறினார்.

இதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்  நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments