திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் பறிப்பபதர்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் கிளை உடைந்ததில்  கீழே வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி பலி: திருகோணமலையில் சோகம் | Girl Dies After Falling From Mango Tree

இதன்படி கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து சிறுமியின் சடலத்தைச் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments