இனம் தெரியாத முறையில் சென்று அரசகைக்கூலிகள் வர்த்தகர் ஒருவர் மீது

தாக்குதல் நடத்தியுள்ளனர், ஒட்டுசுட்டான், வடக்கு வாசல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் இனம் தெரியாத மூவரால் தாக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள உணவகம் மற்றும் புதுக்குளம் வீதியில் உள்ள உதிரிகள் வாணிபம் ஆகியவற்றின் உரிமையாளரே இன்று (21.08.2024) நண்பகலில் அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தாக்கப்பட்ட நபர், இன்று வர்த்தக நிலையத்தினை திறந்து வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போது நண்பகல் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள், ஒரு மோட்டார் சைக்கிளில் மூவராக வந்திருந்ததோடு இரும்பு கேபிள்களால் தாக்கி வர்த்தகருக்கு காயத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்
மேலும், வர்த்தகர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments