விடுதலை புலிகள் மீதான தடை மற்றும்:இலங்கை தமிழர் தடை

இது இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது எனவும் இலங்கை தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை என்பது அது இலங்கையை பாதிக்காமல் விடலாம் ஆனால் தமிழக இளைஞர்களை அது ஒரு பிரிவினைக்கு இட்டு செல்லலாம் என்பதற்காக இலங்கை தமிழர்களை ஒரு நிரந்தர எதிரிகளாகவே பார்க்க இந்திய விரும்புகின்றது

இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்புக்கான தடையை நீடிக்கும் இந்திய மத்திய அரசின் முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  நீடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அமைக்கப்பட்ட தீர்ப்பாயம்

இந்த உத்தரவு, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இதற்கிடையே, இந்த அமைப்புக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம் | Delhi Tribunal Upholds Ban On Ltte

இந்த தீர்ப்பாயமானது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதில் ஆட்சேபனை இருப்பவர்கள் அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலர்

இதையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ(vaiko) உள்ளிட்ட பலர், புலிகள் அமைப்பு மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தீர்ப்பாயத்தை அணுகினர்.

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம் | Delhi Tribunal Upholds Ban On Ltte

மத்திய உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘புலிகள் அமைப்பினர் தனிநாடு கோரிக்கையை இன்னும் கைவிடாமல், தலைமறைவாக செயல்பட்டு வருகின்றனர். நிதி திரட்டுதல் மற்றும் தனிநாடு குறித்த பிரசார நடவடிக்கைகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

ஐந்தாண்டு கால தடையை உறுதி செய்துள்ள தீர்ப்பாயம் 

‘வெளிநாடுகளில் வாழும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்’ என, தெரிவித்திருந்தது.

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம் | Delhi Tribunal Upholds Ban On Ltte

இதையடுத்து, புலிகள் அமைப்பின் மீதான ஐந்தாண்டு கால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘புலிகள் அமைப்பின் நோக்கம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை செல்லும்’ என, தெரிவித்துள்ளது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *