சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல் (Israel) மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி | Live News Syria Civil War Tamil

முன்னதாக சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி | Live News Syria Civil War Tamil

மேலும் “தலைநகரை நகரை நாங்கள் சுற்றி வளைத்து விட்டோம்”  என்று கிளர்ச்சியாளர்கள் குழுவின் தளபதி ஹசன் அப்தில் கனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை காணப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments