சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நாளை(10) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியும் அவர்களுக்கு நீதி கோரியும் கடந்த பல வருடங்களாக அவர்களின் உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இலங்கை அரசிடம் நீதி கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டம்

இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு கிழக்கில் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் | Protests In The North And East Human Rights Day

அந்தவகையில், திருகோணமலையில்(trincomale) பேருந்து தரிப்பிடத்திலும், அம்பாறையில்(ampara) தம்பிலுவில் மத்திய சந்தையிலிருந்து திருக்கோவில் வரையும், மட்டக்களப்பில்(baticaloa) தந்தை செல்வா சிலைப்பகுதியிலிருந்து காந்தி பூங்கா வரையிலும், வவுனியாவில்(vavuniya) பேருந்து நிலையத்திலும், முல்லைத்தீவில்(mullaitivu) கச்சேரிக்கு முன்பாகவும், யாழ்ப்பாணத்தில்(jaffna) நல்லை ஆதீனம் முன்பாகவும், கிளிநொச்சியில்(kilinochchi) கந்தசுவாமி கோவில் முன்றல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலக முன்றலிலும், மன்னாரில் பேருந்து நிலைத்திலும் காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments