பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ;பெண்ணை மோத வந்த கார் மீது துப்பாக்கிச் சூடுகொழும்பு கடுவலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (10) அதிகாலை பெண்ணொருவரை மோதவந்த கார் மீது பொலிஸார், துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

பெண் ஒருவர் கடுவலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் மோட்டார் சைக்கிளில் வருவதாகவும், தன்னை காரொன்று விபத்தை ஏற்படுத்தி கொல்லுவதற்காக பின்தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலையத்தின் இரவுக் கடமைக்குப் பொறுப்பான அதிகாரியும் பிரதான வாயிலில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் வீதிக்கு வந்து தயாராக இருந்த நிலையில்,

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ;பெண்ணை மோத வந்த கார் மீது துப்பாக்கிச் சூடு | Police Take Drastic Action Shots Fired Car Woman

மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் அதிவேகமாகப் பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்த முற்பட்டனர்.

எனினும் காரின் சாரதி பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும், கார் தப்பிச் சென்றுள்ளது. தற்போது, ​​குறித்த 38 வயதுடைய பெண் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் மற்றும் சாரதியை கைது செய்ய பல விசாரணை குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *