மருதானை – மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பொலிஸார் நடாத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில், சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் துப்பாக்கியுடன் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படும், வீடொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியால் குறித்த துப்பாக்கி அப்புறப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த 20ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு அருகில் பெண் மீது துப்பாக்கிச்சூடு... மற்றுமொரு சந்தேகநபர் சிக்கினர்! | Shot On Woman Maligakanda Court Suspect Arrested

விசாரணையில் துப்பாக்கியானது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதன்படி முச்சக்கர வண்டி சாரதியும் கடந்த 22ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கியை ஜம்பட்டா வீதியில் கொண்டு சென்று வேறுவொருவரிடம் கொடுத்தது தெரியவந்தது.

நீதிமன்றத்திற்கு அருகில் பெண் மீது துப்பாக்கிச்சூடு... மற்றுமொரு சந்தேகநபர் சிக்கினர்! | Shot On Woman Maligakanda Court Suspect Arrested

கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் துப்பாக்கியை பெற்றுக்கொண்ட சந்தேகநபர், நேற்றையதினம் (24-12-2024)  ஜம்பட்டா வீதி பகுதியில் கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 13, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments