விமான விபத்தில் 28 பேர் உயிர் பிழைத்ததாக கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடக்கம். உயிர் பிழைத்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கஜகஸ்தானில் உள்ள அதிகாரிகள், என்ன நடந்தது என்பதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் உறுப்பினர்கள் அந்த இடத்திற்குச் செல்லவும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவியைப் பெறுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டனர்.

பறவைகள் தாக்கியதால் ஏற்பட்ட விபரீதம்

விசாரணையில் கஜகஸ்தான் அஜர்பைஜானுடன் ஒத்துழைக்கும் என்று அரசாங்கம் கூறியது.

ரஷ்யா நோக்கி சென்ற விமானம் வெடித்து சிதறியது: 42 பயணிகள் கருகி மாண்டனர் | Passenger Plane Crashes In Kazakhstan

பறவைகள் தாக்கியதை அடுத்து விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இரண்டாம் இணைப்பு

கஜகஸ்தான் நாட்டின் விமான நிலையத்தின் அருகே அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 42 பயணிகள்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

அஜர்பைஜானின்(Azerbaijan) பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு(russia) 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தானில்(Kazakhstan) அக்டாவ் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.

தீப்பற்றி எரியும் காணொளி காட்சிகள்

பயணிகள், விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம்

விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  

ரஷ்யா நோக்கி சென்ற விமானம் வெடித்து சிதறியது: 42 பயணிகள் கருகி மாண்டனர் | Passenger Plane Crashes In Kazakhstan
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments