நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியான்மர் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

மியன்மார் அகதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Made President Regarding Myanmar Refugees

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், குடிவரவு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

மியன்மார் அகதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Made President Regarding Myanmar Refugees

ஆனால் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பது பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரே என தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளரினால் இது தொடர்பான அறிவித்தல் வாய்மொழியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமில் உள்ள அகதிகளில் 40 இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுவதால் இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் தடையின்றி உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *