5000 ஆயிரம் வருடம் பழமையானதும் 78 மில்லியன் மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழியின் இருப்பையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் உறுதியாக இருந்துள்ளார் என அமெரிக்காவின் (United States) பிரபல பின்னணி பாடகி மாயா தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளுக்கென்று சட்டம், முப்படைகள் என அனைத்தையும் கட்டமைத்து வைத்துள்ளார்கள்.

அத்துடன் தமது சமூகத்தையும், ஒழுக்கம், கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் என்பன சிறப்பாக அமைக்கப்பட்டு கட்டுக்கோப்பாக வழிநடத்தப்பட்டுள்ளது.

50,60 ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவின் பேரினவாத அரசுகளால் தமிழ் மொழியானது புறக்கணிக்கப்பட்ட காலமாக காணப்பட்டது.

அரச நிறுவனங்கள், பொது வெளிகள் என எல்லா பரப்பிலும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் தனி சிங்களச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதே தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளியை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments