கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது .

தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் இன்றைய தினம் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை | Jaffna Mother Also Dies In Kilinochchi Accident

சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  விபத்தில் காயமடைந்த  தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில்  இந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments