யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் இன்றையதினம் (08-01-2025) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள் | Jaffna A9 Road Accident Family Man Died Photos

குறித்த விபத்தில் ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள் | Jaffna A9 Road Accident Family Man Died Photos

இவ்விபத்து தொடர்பான காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments