இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(itak) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங்(julie chung) இற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) இடம்பெற்றது.

இதன்போது அவருடன் பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்(sri neshan) தெரிவித்தார்.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அதில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறையில்தான் அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் அதற்கான உதவிகளை அமெரிக்க தூதுவர் என்ற வகையில் அவர் எமக்கு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசும் இது விடயத்தில் அக்கறை காட்டவேண்டும் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் இறுதியுத்த காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உண்மையை கண்டறிதல் அதற்கான நீதியை வழங்குதல் அதன் பின்னர் இவ்வாறான விடயங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்திப்பு தொடர்பில் அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்… 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments