யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் | Signature Protest Held In Thenmarachchi Jaffna

நீண்டகாலமாக அரசியல் கைதிகள் எனும் போர்வையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் | Signature Protest Held In Thenmarachchi Jaffna

கடந்த சில நாட்களாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இன்று சமூக அமைப்பொன்றினால் தென்மராட்சி பகுதியிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments