யாழ். கைதடியில் தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பிறந்து ஒரு நாளான சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் இன்று (21.01.2025) காலை வேலை செய்வதற்காக சென்றவர்கள் கிணற்றில் நீர் எடுக்க முற்பட்டவேளை சிசு ஒன்றின் சடலத்தை பார்த்ததும் கிராம சேவகர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவிடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; தாய் உட்பட மூவர் கைது | Baby Body Umbilical Found Jaffna Woman Arrested

அதேவேளை, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான, 3பிள்ளைகளின் தாயான பெண் கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் கொலைக்கு உதவி செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *