இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் பொலிஸாரின் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில்மாற்றம் ஏற்படவில்லை என்பதை மருதானை சம்பவம் வெளிப்படுத்துகின்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் மாற்றம் ஏற்படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண் உயிரிழப்பு; கஜேந்திரகுமார் கவலை | Tamil Woman S Death At Maradana Police Station

அதோடு இந்த ஆட்சி மாற்றத்தால் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  நாட்டின் தலைநகரிலுள்ள 24 மணி நேரமும் தீவிரமான செயற்பாட்டில் இருக்கக்கூடியதெனக் கருதப்படுகின்ற சர்வதேச சமூகத்தினரும் வெளிநாட்டுச் சுற்றுலாபயணிகளும் அதிகம் நடமாடுகின்ற பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments