- சீமான் வன்னிக்குச் சென்றது உண்மையா?
- வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சீமான் சந்தித்தார் என்று கூறப்படுவது உண்மையா?
- சீமான் ஈழத்தில் ஆமைக்கறி உண்டாரா இல்லையா?
- சீமான் அங்கு ஆயுதப் பயிற்சி எடுத்துகொண்டாரா இல்லையா?
தமிழ் நாட்டில் மாத்திரமல்ல, உலகத் தமிர்கள் மத்தியிலும் அதிகம் எழுப்பப்பட்டுவருகின்ற கேள்விகள் இவைகளாகத்தான் இருக்கின்றன.
சீமானின் ஈழப் பயணம் என்பது உலகத்திற்கு வேண்டுமானால் ஒரு இரகசியமாக இருந்தாலும், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலோ, அங்கிருந்த பொதுமக்களைப் பொறுத்தவரையிலோ அது ஒன்றும் இரகசியமான விடயம் இல்லை.
சீமான் வன்னி சென்று பிரபாகரன் அவர்களைச் சந்தித்தபோது, தலைவரது மெய்ப்பாதுகாவலர் அணியில் நின்ற ஒரு போராளி கூறிய பரப்பு வாக்குமூலம்- சீமானின் வன்னிப் பயணம் தொடர்பாக இதுவரை வெளிவந்த பல செய்திகளை சுக்குநூறாக்கியுள்ளது.
thaarani