முட்டை பல நூற்றாண்டுகளாக நம் ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவற்றின் சுவையும், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவர்களின் முதல் தேர்வாக இதை மாற்றியுள்ளது.

தினமும் காலையில் 2 முட்டை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? | Daily Morning 2 Egg Sapituvathan Nanmai

தசைகளின் வலிமையை அதிகரிக்கும்

முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாகும். தசையின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு புரதத்தின் தரம் மிகவும் அவசியமானதாகும். உடற்பயிற்சிக்குப் பிறகு முட்டைகளை உட்கொள்பவர்களுக்கு தசைவலிமை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. முட்டைகளில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்களின் சமநிலை, தசை வலிமையை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,குறிப்பாக வயதானவர்களுக்கு.

தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? | Daily Morning 2 Egg Sapituvathan Nanmai

மூளையின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்

முட்டைகளில் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் அவசிய ஊட்டச்சத்தான கோலின் நிறைந்துள்ளது. கோலின் நினைவாற்றல், கற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. அமெரிக்கன் சொசைட்டிஸ் ஃபார் எக்ஸ்பரிமென்டல் பயாலஜி (FASEB) கூட்டமைப்பின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், போதுமான கோலின் உட்கொள்ளல் அறிவாற்றலை அதிகரிப்பதுடன், நரம்புச் சிதைவு நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? | Daily Morning 2 Egg Sapituvathan Nanmai

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

முட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களான லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின், வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, அடிக்கடி முட்டை உட்கொள்வது உடலில் இந்த கரோட்டினாய்டுகளின் அளவை அதிகரிக்கிறது, இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது.

தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? | Daily Morning 2 Egg Sapituvathan Nanmai

இதயத்தை பலப்படுத்துகிறது

முட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது, விஞ்ஞானிகள் முட்டைகளை மிதமாக உட்கொள்ளும்போது பெரும்பாலான மக்களின் இரத்தக் கொழுப்பைப் பாதிக்காது என்று கூறுகிறார்கள். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, மிதமான அளவு முட்டைகள் உட்கொள்வது, ஆரோக்கியமான நபர்களுக்கு பாதிப்பில்லாதது மற்றும் இதய ஆபத்தை பாதிக்காது என்று கூறுகிறது. இதய நோய் இல்லாத ஆரோக்கியமான மக்கள், ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக தினமும் இரண்டு முட்டைகள் வரை பாதுகாப்பாக சாப்பிடலாம்.

தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? | Daily Morning 2 Egg Sapituvathan Nanmai

எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

கால்சியம் உட்கொள்வது மற்றும் எலும்பு வலிமைக்கு முக்கியமான வைட்டமின் டி சத்து நிறைந்த சில உணவுகளில் முட்டையும் ஒன்று. தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, வைட்டமின் டி போதுமான அளவு உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கும் என்று நிரூபித்துள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments