இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற புது மணப்பெண்ணின் 11 பவுண் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தில் , பெண்ணின் நகைகளை மீள ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2023ஆம் ஆண்டு  இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கும், பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை தமிழ் இளைஞருக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி | Snatches Sri Lankan Women S Tali Chennai Airport

 விமான நிலயத்தில் காத்திருந்த அதிர்ச்சி

அதன்பின்னர் மாப்பிள்ளை பிரான்ஸுக்கும், பெண் இலங்கைக்கும் திரும்பிய நிலையில், அதே ஆண்டின் இறுதியில் மீண்டும், தம்பதிகள் தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களுக்கு சென்றுவிட்டு பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக 2023 டிசம்பரில் புதுமணப்பெண் தனது மாமியார், மாமனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது பெண்னின் கழுத்தில் இருந்த தாலி கொடியை பார்த்த பெண் சுங்கத்துறை அதிகாரி , அந்த தாலி கொடி கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி அதை பறிமுதல் செய்தார்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி | Snatches Sri Lankan Women S Tali Chennai Airport

அதிகாரியின் செயலால் அதிர்ச்சியடைந்த இலங்கை யுவதி அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது.

தாலியை கழட்ட சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், எனவே சம்பந்தப்பட்ட சுங்கத்துறை பெண் அதிகாரி மீது உயரதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் மனுதாரரிடமிருந்து பறிமுதல் செய்துள்ள தாலிச் சங்கிலியை திருப்பிக்கொடுக்க வேண்டும் எனவும் தாலிச்சங்கிலி இந்துமதப் பெண்களுக்கு புனிதமானது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி | Snatches Sri Lankan Women S Tali Chennai Airport

விசாரணை என்ற பெயரில் அதை கழட்டச் சொல்லி பறிமுதல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதுடன் கண்டனத்துக்குரியது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை வெளிநாட்டில் இருந்து வரும் விமானப் பயணிகள் 10-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து இருந்தாலோ மறைத்து வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன,   

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments