தமிழர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் (Viswanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தையிட்டி பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டிய சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டு இனவழிப்பு

அத்தோடு, சிங்கள பௌத்திற்குள் உள்வாங்கப்படுவதற்கான தமிழ்ப் பண்பாட்டு இனவழிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம் | Thaiyiti Buddhist Temple Controversy In Jaffna

தற்போது தையிட்டி பௌத்த விகாரை விவகாரம் பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள நிலையில், தமிழர் காணிகள் திரும்ப கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments