முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

குறித்த போராட்டம் இன்று (16) மூன்றாவது நாளாக தொடர்கின்றது

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

போராளியின் கொள்கை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) உள்ளிட்டவர்கள் சென்று தமது ஆதரவை வழங்கியதோடு குறித்த முன்னாள் போராளியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி | Former Fighter On Hunger Strike In Mullivaikkal

இந்தநிலையில், குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டு செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்துள்னனர்.

அரசியல் அமைப்பு 

இருப்பினும், உடனடியாக இதனை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தை கொடுத்து தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி | Former Fighter On Hunger Strike In Mullivaikkal

இருப்பினும், தமிழரசு கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்திலே தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையிலே தாங்கள் விடயங்களை கையாளுவதாக உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக குறித்த முன்னாள் போராளிஅறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

01 தமிழர்களிற்கு ஒரு நடைமுறை அரசாங்கம்

02 தமிழர்களிடைய ஆன பிரதேசவாதம் நீக்கப்படவேண்டும்

03 மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் அகற்றப்பபட வேண்டும்

04 வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் புலி உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் புலி என சொல்லி நிதி சேகரிப்பதை நிறுத்த வேண்டும்,

05 உள்நாட்டில் சக போராளிகளை வைத்து பணம் வேண்டி தனிப்பட் ரீதியில் பண்ணை அமைத்தல சுற்றுலா விடுதிகள் கட்டுதல் நிறுத்தப்பட வேண்டும் போராளிகள் பணி யாழர்களாக வேலை செய்கின்றபோது அவர்களிற்கு சரியான சம்பளம் வழங்கப்படுவது இல்லை எனவே அடிப்படை சம்பளமாக அவர்களுக்கு ஒரு மனித்தியாலத்திற்கு 200 படி வழங்க வேண்டும்
வலிந்து காணமல் ஆக்கப்பட்டவருக்கு அரசு உடனடித் தீர்வை வழங்க வேண்டும்

06 தமிழின துரோகிகள் தமிழர் பகுதியில்இருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்

07 இளையோர் முதியவர்கள் பாதுகாற்கப்படவேண்டும்

08 அரசு காணி வீடு இல்லாதவர்களிற்கு வழங்க வேண்டும்

09 இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் விகிதம் அதிகரித்து உள்ளது இதை நிறுத்த வேண்டும்

10 பொருட்களின் விலைகட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்,

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *