மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 துப்பாக்கிச் சூடு 

வீரகெட்டிய-மித்தெனிய வீதியில் உள்ள கல்பொத்தயாய பகுதியிலுள்ள கடைக்குத் தனது மூன்று பிள்ளைகளுடன் இரவு உணவு வாங்க சென்ற போது அவரும் அவரது இரண்டு பிள்ளைகளும்  சுடப்பட்டனர்.

மித்தெனிய துப்பாக்கிச் சூடு - 9 வயது மகனும் பலி | Mitheniya Shooting 9 Year Old Son Also Killed

 உந்துருளியில் வந்த இருவர், T56 துப்பாக்கியுடன் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதான அருண விதானகமகே  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது 6 வயது மகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 9 வயது மகனும் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *