இச்சம்பவத்தில் புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி ஒரு ஆண்டிற்கு முன்னர் உயிரிழந்த நிலையில் மனைவியை பிரிந்த துயரத்தில் இவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் (27-08-2024) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்

யாழில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் எடுத்த தவறான முடிவு! | Husband Died Unable To Bear Wife S Death In Jaffna

உயிரிழந்த குடும்பஸ்தர் சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments