மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள அதே நேரத்தில், தன்னால் தனது ஆட்சியால் அது நிகழ்வதைத் தடுக்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரும் உயிரிழப்பதைக் காண தனக்கு விருப்பமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் முடிவு
அத்தோடு, போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், அமைதியை நிலைநிறுத்துவதற்காகவும் தான் உலகம் முழுவதும் வேகமாக சுற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.