07.04.1978 அன்று அதிகாலை 5.30மணியளவில் செல்லக்கிளியை கொலை செய்ய சென்ற வஸ்தியான்பிள்ளை கும்பலை தனது திறமையால் அனைவருக்கும் சாவொறுப்பை வழங்கி போராட்டத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சென்றார் செல்லக்கிளி அம்மான்.

பாகம் ஒன்றின் ஐந்தாவது தொடர்

 இயக்க உறுப்பினர் கணேசவரப்பிரகாசம் அவர்கள் வேலை காரணமாகச் சென்ற வேளை சிறி லங்கா புலனாய்வாளர்களால் கைது செய்யப்படுகின்றார் இவர் மீதான சித்திரவதைகாரணமாக இவரிடம் இருந்து மடுப்பண்ணை குறித்த தகவலை பெற்றுக் கொண்டார் அதிகாரி வஸ்த்தியான்பிள்ளை.

இவரை ஏற்றிக்கொண்டு  9//04/1978 அன்று அதிகாலை பயணிக்கின்றது செல்லக்கிளியின் பண்ணையை நோக்கிய வஸ்தியாம்பிள்ளையின்பயணம்.நாலு பேர் அடங்கிய ஆயுதக்குழு வந்துகொண்டியிருந்தது முருங்கன் காட்டுப்பாதையை அண்மித்ததும் அவர்களிற்கு கடுமையான பசியும் தண்ணீர் தாகமும் எடுத்து விட்டது, இருந்தும் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மெது மெதுவாக அவர்களின் ஜீப் வண்டி சென்றுகொண்டிருந்தது

கொழும்பில் இருந்து விடிய விடிய வாகனம்ஓடி சரியாகஅதிகாலை 5.30மணியளவில்மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத்தோட்டத்தை நோக்கி வாகனம் சென்று கொண்டியிருந்ததுது,

தோட்ட வாசலை அண்மித்ததும் இதுதான் தோட்டம் என காட்டிக் கொடுப்பவர் சொன்னதும் அவ்விடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன ஓட்டுனரையும் காட்டிக் கொடுப்பவரையும் வாகனத்துக்குள் இருக்குமாறு சொல்லிவிட்டு

வஸ்தியான்பிள்ளையுடன் நாலு ஆயும் தரித்த பொலிஸ் காரர்கள் நடையில் உள்ளே செல்கின்றார்கள், ஆனால் இவர்களைக் கண்டதும் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்கள் தங்களின் தோட்ட வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களைக்கண்டு அவர்கள் பயப்பிடவும் இல்லை கவனிக்கவும் இல்லை தங்களின் வேலையைச் செய்து கொண்டியிருக்கின்றார்கள்

……புத்திசாலியான செல்லக்கிளி அம்மான் தனது ஆயுதங்களை பண்ணைக் கொட்டிலிற்குள் வைப்பது இல்லை எந்த நேரமும் கொட்டிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உடையவர்.  ஏனெனில் சில நேரங்களில் தோட்டத்தைப் பார்ப்பதற்காக சில பொதுமக்கள் உள்ளே வந்து இதைக் கண்டு விட்டால் தகவல் வெளியே சென்று விடும் அதனால் எந்த நேரமும் அம்மான் விழிப்பாகவே இருப்பார்.

இவர்கள் இப்படி இருக்க திடீரென 4 பேர்கொண்டவஸ்தியான்பிள்ளையின் ஜேவர்த்தனா பொலிஸ் அணி ஜீப்வாகனம் பண்ணைக்குள் நுழைந்தது . வந்தவர்கள் உடனே பண்ணைக்கொட்டிலை ஓடிச் சென்று சோதனையிட்டார்கள். ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை, அவ்வேளை நாலு பேரும் எந்தப்பதட்டமும் இல்லாமல் தோட்ட வேலை செய்துகொண்டுயிருக்கின்றார்கள்…..

தன்னைக்கண்டதும் இவர்கள் பயப்பிடவும் இல்லை; மரியாதை கொடுக்கவும் இல்லை; என்பதை அவதானித்த வஸ்தியான்பிள்ளை இவர்கள் 4 பேரையும்கூப்பிட்டு கைகளைக்கட்டி முட்டுக்காலில் வைக்கின்றார்  அடுத்து ஏதாவது குற்றச் செல்களில் ஈடுபட்ட நீங்களா என கேட்டுவிட்டு உமாமகேஸ்வரனை உங்களிற்குத்தெரியுமா?  என வஸ்தியான்பிள்ளை கேட்டார். இவர்கள் தெரியாது என அனைவரும் பதில் அளித்தார்கள். அதை அடுத்து வஸ்தியான்பிள்ளை இவர்கள் சாதாரண இளைஞர்கள் என நம்பி விட்டார்.

செல்லக்கிளிக் அம்மானின் கையை அவிழ்த்து விட்டு அவரைத்  தேனீர் போட்டுவருமாறு கட்டளை வளங்கினார் வஸ்தியான்பிள்ளை.ஏனெனில் கொழும்பில் இருந்து தூரப்பயணம் வந்தமையால் இவர்களிற்கு கடுமையான பசியாக இருந்தது.  அப்போது கிணற்றில் தண்ணீர் அள்ள வேண்டும் என்று செல்லக்கிளி அம்மான் சொல்ல வஸ்தியான்பிள்ளையும் செல்லக்கிளி அம்மானோடு சேர்ந்து செல்கின்றார் அங்கே சென்றதும்  வஸ்தியான்பிள்ளை ஆழமானகிணற்றை எட்டிப்பார்பதற்கு முன்னர் அருகில் இருந்த மரத்தடியில் தனது SMG துப்பாக்கியை கொழுவியே பின்னர் கிணற்றை எட்டிப் பார்க்கின்றார்,……..சரியான  இலக்கு இதுதான் என்பதை விளங்கிக் கொண்ட செல்லக்கிளி அம்மான்  திடீரென  இடக் கையால் பிடித்துக்கொண்டு முழங்கையால் இடித்து வஸ்தியான்பிள்ளையை கிணற்றுக்குள் விழுத்தினார். 

அவர் தண்ணீரில் மிதந்து கொண்டேயிருந்த போது அவரின் மரத்தில் இருந்த ஆயுதத்தை எடுத்து அவரின் முதுகில் ஒரு வெடி வைத்தார்.   அவ் றைவுளை எடுத்துக்கொண்டு கட்டி வைத்தவர்களை மீட்க விரைந்தார் அம்மான். அங்கே சென்றதும் அவரோடுவந்த மூவரும் பதட்டத்தில் காணப்பட்டார்கள். வேகமாக மூவரையும் சுட்டுத் தள்ளினார் செல்லக்கிளி அம்மான் ஆனால் துரதிஸ்ரவசமாக இவர்களின் அணியைச் சேர்ந்த கறுப்பி என்பவருக்கும் தவறுதலாக வெடிப்பிடித்துவிட்டது ,

அது சிறு காயமாகவேயிருந்தது.அடுத்து இவர்கள் வந்த வாகனத்தை சென்று பார்த்த வேளை வஸ்தியான் பிள்ளையின் வாகனச்சாரதியும் அடுத்து எமது உறுப்பினனான கணேசவரப்பிரகாசமும் நிக்கின்றார்கள். அவருக்கு கடுமையான சித்திரவதை செய்து இருக்கின்றார்கள் என்பதை அவரைப்பார்த்தபோது எமக்கு விளங்கியது, அவ்வாகனச்சாரதியை செல்லக்கிளி அம்மான் சுட்டுக்கொன்றார். ஆனால் இவருக்கு செல்லக்கிளி ஒன்றும் செய்யவில்லை என்ன துரோகம் செய்த போதிலும் அம்மானுக்குச் சுட மனம் வரவில்லை அம்மான் ஒரு இரக்கக்குணம் உடையவர் அனைத்துப் போராளிகளையும் பயிற்சி கொடுத்து வழர்த்தவர் அம்மான்தான் அதனால் அவருக்கு மனம் வரவில்லை கடுமையாகப் பேசிவிட்டு நடையில் வீட்டிற்குபோ என கட்டளை வழங்கினார் அம்மான் பின் அந்த வாகனத்தில் ஆயுதங்களையும் போராளிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லக்கிளி வேறு இடம் நோக்கிச்சென்றார்.

செல்லக்கிளி அம்மானின் தனிப்பட்ட திறமை

செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த ஊர்தியையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி  ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும், பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான்.

காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை; தான் வாழ்ந்த சூழ்நிலையை ;ஒரு கொரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.

ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்கு கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். தொடக்க காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கும் வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது; கொட்டில் போடுவது; கூரைவேய்வது; போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.

சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி என்ற இவ் அசாத்திய வீரன்.

செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரியது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த சொற்கள்.இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன்.

செல்லக்கிளி முதல் முதலில்  உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி; பொலிஸ் உளவுப்படைதலைமையகத்தைச் சேர்ந்த வஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல்; உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல்; பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல்; கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல்; என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன்னைத் தனித்துவமாக முத்திரை பதித்தான் செல்லக்கிளி என்றஒப்பற்ற மாவீரன்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் சுட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மையில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் உட்படுத்தாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி வஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.

ஆபத்து வரும் வேளைகளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது என்றுகூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்”  தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.

தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு, விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” 

என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர். 

தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன்; பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது; இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சூட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.

படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும்; வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள்; அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். ஆனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டம்ஆயுதப் போராட்டமாகமாறியது.செல்லக்கிளியின் வீர வரலாறு அப்படி இருக்க அடுத்ததாக

 25/04/1978அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்11 நடவடிக்கைக்கு தாங்கள் உரிமை கோரினார்கள்.

 பின்னர் சிங்களஅரசு19/07/1978 விடுதலைப் புலிகள் மீதான தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில்கொண்டு வந்தது. 

சிங்கள அரசு    இதற்குப்பின்னரே கூடுதலான தமிழ் இளைஞர்களை சிங்களப்படைகளால் கைது செய்யப்பட்டு; ஜெயிலில் அடைக்கப்பட்டு; மற்றும் காணும் இடத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். இதனாலயே தமிழ் இளைஞர்களிடம் போராடும் மனநிலை தீவிரம் அடைந்தது,,

1978 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் விடுதலைப் புலிகளிள் அமைப்பில் சீலன் மற்றும் புலேந்திரன் இருவரும் இணைந்து கொண்டனர்.

 

திருமலை மாவட்டம் சிங்களக்குடியேற்றங்களாலும் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்டபகுதியாகும். திருமலையில் பள்ளி மாணவனாக சீலன் இருந்த காலத்தில் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவனிற்குஉதயமானது.1978 செப்டம்பர் ஜே.ஆர்.ஐயவர்தன சிறிலங்கா சனநாயகக் குடியரசின் ஐனாதிபதியாக பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீலன் பள்ளி மாணவனாக இருந்தபோதே நடவடிக்கையை மேற்கொண்டான்.

அந்த பதவியேற்பினை முன்னிட்டு திருமலை இந்துக்கல்லூரியில் சிறிலங்காவின் தேசியக்கொடியை அவர்கள் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படிருந்தது. அந்தத் தேசியக்கொடியில் பொஸ்பரஸ் இரசாயனப் பொருளை மறைத்து வைத்திருந்தான் சீலன் அந்தக் கொடி ஏற்றப்படும்போது பொஸ்பரசில் காற்றுப் பட்டு அந்தக் தேசியக்கொடி எரிந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அரச படைகளால் சீலன் கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதையை எதிர்கொண்டான். ஆனால் தனக்கு உதவியாகயிருந்த எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை.பின்னர் அவன் நிராயுதபாணி என சிங்கள அரச படைகளால் விடுதலை செய்யப்பட்டான்.இதை அறிந்த தலைவர் நேரடியாகத் திருமலை சென்று விடுதலைப் போராட்டம் தொடர்பாக கதைத்துவிட்டு அவர் செய்த துணிகர செயலையைப் பாராட்டி விட்டு திரும்பி வந்துள்ளார்.

காலப்போக்கில் சந்தோசம் மாஸ்ரர் ஊடாக லெப் .கேணல் புலேந்திரன், லெப். சீலன் இருவரும் இணைக்கப்பட்டு விடுதலை புலிகளால் உடையார் கட்டில் நடாத்திய 2 ஆவது பயிற்சி முகாமில் தேசியத் தலைவரால் 1978 தை மாதம்அவர்களிற்கான ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது, தேசியத் தலைவரின் பூரண நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாக விளங்கியவன் சீலன், அதனாலயேவிடுதலை புலிகளின் முதல் இராணுவத் தளபதியாக அவன் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டான்,சீலனின் நடவடிக்கைகள்….
1981 /9 ஆம் மாதம் பிரிகேடியர் வீரதூங்கா பதவி உயர்வு பெற்ற சமயம் யாழ் காங்கேசந்துறை வீதியில் வைத்து இரண்டு இராணுவத்தை சுட்டுக் கொன்றான்.

 அடுத்து18/05/1983 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளிற்கான வாக்களிப்பு யாழ் கந்தர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றபோது அரச படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டான்.
27/10/1982 சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலில் 10த்திற்கு மேற்பட்ட பொலிசார் கொல்லப்பட்டனர்; இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள் ஒன்பது 303 ரைபிள் உட்பட 30 ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது; அந்தக் தாக்குதலில் லெப் சீலன், லெப் கேணல் புலேந்திரன், ரகுவப்பா உட்பட மூவர் காயமடைந்தனர்.


சீலனின் கால்துடைப்பகுதியில்  காயம் ஏற்பட்ட  மூவரும் தமிழகம் கொண்டு போய் காயம் மாற்றப்பட்டு மீண்டும் தமிழீழம் வந்து தங்களின்கடமைகளைத் தொடர்ந்தார்கள்.
இவனின் கடசிப்பயணம்

15/07/1983 அன்று மூன்று மணியளவில் தமிழீழத் தேசத்துரோகி ஒருதனின் தகவலிற்கு அமைவாக சீலன், ஆனந், அருணா, ஆகிய மூவரும் தங்கியிருத்த சாவகச்சேரி மீசாலைப்பகுதியை சிங்கள இராணுவம் சுற்றிவளைக்கின்றது . ஒரு மினிபஸ் ;இரண்டு ஜீப் ;ஒரு ரக் என நூற்றுக்கணக்கான சிக்களப் படையினர் சுற்றி வளைத்துதாக்குதல் நடத்துகின்றனர்; முதலில் சீலன் நெஞ்சில் காயம் அடைகின்றான் உடனே தன்னை சுட்டு விட்டு ஆயிதத்தை எடுத்துக்கொண்டு தலைவரிடம் கொடுக்குமாறு தனது நண்பன் அருணாவிற்கு கட்டளை வழங்குகின்றான்; சிறிது நேரத்தில் வீரவேங்கை ஆனந்தும் காயப்பட்டு அதே அனுமதியை அருணாவிடம் கோருகின்றான்;இருவரையும் சுட்டு விட்டு அவ்விடத்தில் இருந்து முற்றுகையை உடைத்துக்கொண்டு வேகமாகத் தப்பிச்சென்று இருவரின் ஆயுதங்களையும் தலைவரிடம் ஒப்படைத்தான் அருணா.

செல்வக்களி அம்மான் பற்றி தேசியத்தலைவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், எமது விடுதலைப் போராட்டத்தின் வழர்ச்சிக்கு செல்லக்கிளி அண்ணையின் செயல்பாடு மிகவும் பெரியது அவர் எங்களைவிட வயது கூடியவராகவும் அனுபவம் நிறைந்தவராகவும் இந்தார், அதைவிட மிகவும் துணிச்சலானவராகவும் எமக்கு ஒரு வளிகாட்டியாகவும் இருந்தார்,
அக்காலப்பகுதியில் மிகவும் இள வயது உள்ள இளைஞர்கள் ஏதாவது எதிரிக்குச் செய்ய வேண்டும் என்ற உணர்பில் எம்மோடு இணைந்துகொண்டுயிருந்தார்கள்,

அவர்களிற்கு சிறந்த பயிற்சியையும் உயிரை அற்பணிக்கப்கூடிய வீரத்தையும் ஊட்டுவதற்கு செல்லக்கிளி அண்ணெ எமக்குக் கிடைத்த ஒரு வரமாகவே பார்க்கலாம்,

அப்பொழுது நாம் ஆரம்பத்தில் இருந்த வன்னிக்காட்டில் காலை விடிந்ததும் இளைஞர்களை லையன் பண்ணி வாருங்கள் புலிகளே தமிழீழம் காண்போம் வாழ்வா சாவா ஒரு கை பார்ப்போம் என அவர் பாடிக்கொண்டு முன்னால் ஓட அனைவரும் அப்பாட்டை படித்துக் கொண்டு பின்னால் ஓடுவார்கள் அதற்குப் பின்னால் நானும் ஓடுவேன்,

காலைப் பயிற்சி முடிந்ததும் செல்லக்கிளி அண்ணை வேட்டைக்குச் சென்று விடுவார், சிறிது நேரத்தால் மான் மரைகளைச் சுட்டுக்கொண்டு முகாமிற்கு வருவார்,வந்ததும் அவ் மிருகளை உரித்து இறைச்சாக வெட்டி அவரே அனைத்துப் போராளிகளிற்கும் சமைத்து உணவுபரிமாறுமார் ஏனனில் அந்தக் காலப் பதியில் உணவு தேடுவது எமக்கு ஒரு சாவாலாக இருந்தது ஏனனில் எவரையும் இலகுவில் நம்ப முடியத பிரச்சனை எம்மிடையே இருந்தது அதனால் எல்லா வேலைகளையும் அம்மானே செய்தார்,,
எங்களோடுஅவர் இருந்த நாள்தொடக்கம் அனைத்து இளைஞர்களும் செல்லக்கிளி அண்ணைக்குக்கட்டுப்படுவார்கள்
ஏதாவது ஒரு நடவடிக்கைகுப் போவதாக நாங்கள் இருந்தால் செல்லக்கிளி அண்ணை இல்லாமல் போனால் வெல்ல மாட்டோம் என்ற உணர்வு என்னையில் இருந்து அனைவருடரிடமும் இருந்தது

ஆனால்செல்லக்கிளி அண்ணையோடு போய் சண்டையிட்டு தோற்றவரலாறே எமது போராட்டத்தில் கிடையாது, இறுதியாக திருனல்வேலித்தாத்தலிற்கு அவரின் தலையில்தான் எங்களைக்கொண்டு சென்றார் மிகவும் இறுக்கமான முறையில் எங்களிற்கிளிற்குக்கட்டளை வழங்கினார் ,மிகவும் திறமையாகச்சண்டையிட்டு பெரும் தொகையான ஆயுதங்களை எமக்குத் தந்தபின் வெற்றியோடுகண்ணை மூடியதாகத் தலைவர் குறிப்பிட்டார்.,

07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில்வைத்து “அவ்ரோ” விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது .


07/09/1978 அன்று ஜேவர்த்தனா அரசு புதிய குடியரசு அரசியல் சட்டத்தை பிரகடனப்படுத்தியது . அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக ஏதாவது செய்ய வேண்டும் என விடுதலைப் புலிகளின் மத்திய குழு முடிவு எடுத்தது,

அதற்கு அமைவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் நாளன்று சிறிலங்காவின் விமானம் ஒன்றை குண்டு வைத்து தகர்க்கலாம் என்ற ஆலோசனை தலைவரால் முன்வைக்கப்பட்டது. அதை செய்வதற்காக முதலில் தரவு எடுப்பதற்கு பேவி அண்ணாவும், குலம் அவர்களும் பலாலி இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்து தகவலை திரட்டி வந்தனர்.அவர்கள் வந்ததும் அனைவரும் கூடி ஆலோசனை நடத்திய போது விமானத்தில் பயணம் செய்பவர்கள் பாதிக்கக் கூடாது எனவும் பயணிகள் இறங்கிய பின் விமானத்தை குண்டுவைத்து தகர்க்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.பேவி அண்ணாவே அதற்கான நேரக் கணிப்புக் குண்டை தயாரித்தார். குண்டுவெடிப்பை நிறைவேற்றும் நிமித்தம் பேவிஅண்ணாவும் , ராவவனும் பலாலியில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் இருந்து அனைத்துப்பயணிகளும் இறங்கிய பின் நேரக்கணிப்புக் குண்டை வெற்றிகரமாகப் பொருத்தினார்கள்

.07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிஸக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பில் கோலாகலமாக கொண்டப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில் வைத்து “அவ்ரோ” விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இலங்கை தலைநகரில் எமது அமைப்பினால் முதலாவது நடத்தப்பட்ட வெற்றிகர நடவவடிக்கையாகும்.அந்தக் காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு பேபி அண்ணாவும், ராகவனும் திரும்பினார்கள்.அனைத்தும் நல்லா நடந்தாலும் முக்கிய போராளி குலம் அவர்கள்11/10//1978 அதாவது ஒரு மாதம் கழித்து சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் எவரையும் காட்டிக்கொடுக்கவில்லை.இத்தோடுநின்றுவிடாமல் அடுத்து ஒரு பாரிய  சிறப்பு நடவடிக்கை செய்ய திட்டமிட்டார்கள்புலிகள்.

05/12/1978 அன்று திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியை கொள்ளையடிப்பதற்காக தலைவர்உட்பட செல்லக்கிளி அம்மான் இவர்களோடு இன்னும் இருவர் செல்கின்றார்கள்..

 

ஆனால் இவர்கள் செல்லும் முன்னர் ரஞ்ஜீத் அப்பா என்றழைக்கப்படும் தமிழேந்தி அவர்களுடன் பேசி ஒருமுடிவிற்குவந்துள்ளனர் . ஏனெனில் அப்பொழுதுஅவர்அந்த வங்கி மனேஜ்சர்ஆக இருந்தார். பணம்எங்கே இருக்கின்றது என்ற தவகலைக் கொடுத்ததோடு மட்டும் இன்றி அந்நேரம் பாங்கையும் திறந்து வைத்திருந்தார்.அந்நேரம் இவர்கள் தெருவோரமாக நின்ற ஒரு கார்க் காரனோடு கதைத்து அவனை அவ்விடத்தில் இறக்கி விட்டு இவர்கள் 4 பேரும் அங்கே சென்று இரண்டு காவல்துறையினரை சுட்டு விட்டு அங்கு இருந்து 12 லட்சம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டுசெல்கின்றார்கள் ….. பொலிஸ் தேடிவருவான் என்ற சந்தேகத்தில் பணத்தை மூன்றாகப் பிரித்து ஒரு தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு காரை ஒரு நம்பிக்கையான வீட்டில் விட்டுவிட்டுத்் தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றார்கள்.

 அடுத்து மூன்று மணித்தியாலம் களித்து தலைவர் போகவில்லை செல்லக்கிளி அம்மானோடு மூன்று பேர் மட்டும் போய் காரை எடுத்துக்கொண்டு கரவெட்டிக்குச் சென்றார்கள். அங்கே சென்று தங்களிற்கு  நம்பிக்கையான ஒரு வீட்டுக்கிணற்றில் அப்பணத்தை தண்ணீர் உள்ளே செல்லாதவாறு  பொலித்தீன் பார்சல் பண்ணி போடுகின்றார்கள். போட்டுவிட்டு வேறு இடம் தப்பிச் செல்கின்றார்கள்.மூன்று நாள் சென்று செல்லக்கிளி அம்மான் இன்னொருவர் என்று  இருவர் கிணற்றைப் போய் பார்க்கின்றார்கள் அங்கே பணம் உள்ளது . ஆனால் இவர்களிற்கு நீரிக்குள் சுழியோடத் தெரியாது. அப்பொழுது பக்கத்தில் நின்ற ஒரு பொடியனைக்கூப்பிட்டு கிணற்றுக்குள் இறங்கிப் பெட்டியை எடுத்துதுத்தருமாறு கேட்க அவர் முடியாது என்று சொல்ல அவரை விரட்டி உள்ளே இறக்கி அப்பெட்டியை எடுக்கின்றார்கள்.

அதை எடுத்ததும் ஒருவர் சொல்கின்றார்” இது கொள்ளையடித்த பணம் என்று” அதற்கு செல்லக்கிளி அம்மான் அவனிற்குப் பேசிவிட்டு இது எங்கட பணம் என்று சொல்லி இருவரும் முரண் பட்டுக்கொண்டு சென்றார்கள்.இப் பணத்தைக்  கொண்டு இவர்கள் குருநகரில் இருந்த நம்பிக்கையானவரான அருளாளன் ஐயா வீட்டில் பாதுகாப்பாக வைத்துச் சென்றுள்ளார்கள், இரண்டு கிழமை கழித்து  ஆஸ்பத்திரி செல்வதாக சொல்லி அவர் சென்று அப்பணத்தை உரியவர்களிடம் கொடுத்துள்ளார். இவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்த செல்லகிளி அம்மான் சொற்கண்ணை இவரின் கையில் கொடுத்து ஒரு படம் எடுத்து வைத்துள்ளார். இன்றையில் இருந்து நீர் எங்களிற்கு உரிய ஆள்தான் எனச் சொல்லி அவரின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னாளில் இவர்1995ம் ஆண்டு எமது அமைப்பில் இணைந்த இவர் இறுதி2009 /05/18 வரையிருந்துகடமையாற்றியவர் அத்துடன் இவரின் மகளும் போராளியாகயிருந்து வீரச்சாவு அடைந்துள்ளார், 2020ஆண்டு கொரன நோய்யின் காரணமாகச் குருநகரில் சாவடைந்தார்

இலங்கைத் தமிழர் வரலாற்றில் முதல் முதலாக அரசியல் தஞ்சம் கோரிய தமிழராக சத்தியசீலன் ஆவார் என்பதை எவரும் மறந்து விட முடியாது.ஆரம்பகால தமிழர் பேரவை தலைவராகச் செயல்பட்ட சத்தியசீலன் முதல் முதலாக 1977 ம் ஆண்டு இலங்கையில் வாழமுடியாது என பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரினார். அவரின் கோரிக்கை பிரித்தானியா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் அங்கே சென்று தனது தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.இவரைத்தொடர்ந்து பயந்த தமிழர்கள் அனைவரும் சுதந்திரமும் வேண்டாம்; போராட்டமும்வேண்டாம்; எனச் சிக்களவற்குச் சார்வான தமிழர்களும் சரி; தமிழர்களின் தனி நாட்டுக் கொள்கைக்கு ஆதரவானவர்களும் சரி;  அனைவரும் சுயலாப வாழ்விற்காக வெளிநாடுகளிற்குச் சென்று அரசியல் புகளிடம் கோரினார்கள். அவர்கள் அனைவருக்கும் அரசியில் புகளிடம் வெளிநாடுகளால் வழங்கப்பட்டது.

1978ஆம்ஆண்டு பிற்பகுதி மாத்தையா மற்றும் நவம்டடி,சதாசிவம், கிட்டு இணைக்கப்பட்டனர். 

 

1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாலா அண்ணை அவரின் மனைவி அடல்இருவரும் எமது அமைப்பில்இணைக்கப் பட்டனர். 

 

இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலா அண்ணை, அவரின் மனைவி அடல்இருவரில்  பாலா அண்ணை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களான மதி, குமரன், குமணன், மாத்தையா , ராகவன், சுந்தரம், வாத்தி,  கலாபதி, நிர்மலன், தம்பி போன்றவர்களிற்கு இரவு பகலாக விடுதலைப் போராட்டம் எப்படி நடத்துவது; எப்படி எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாப்பது; எப்படி வெளிநாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றது; எந்த நாடுகள் சுதந்திரம் அடைந்துள்ளன; என அனைத்து  விடயங்களையும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து அவர்களுக்கு பாடங்களையும்  எடுத்துக் கொண்டேயிருந்தார்…….

     

                   

அது மட்டும் அல்ல இறுதியாக அவர் சாவடையும்வரை  தலைவருக்கு உதவியாக ஒரு சிறந்த ஆலோசகராகயிருந்து  எமது விடுதலைப் போட்டத்தை பாதுகாத்தார். என்பதனை  தமிழர்களாகிய நாம் மறந்து விடக் கூடாது. அடல் அன்றியும் அப்படித்தான் பெண் போராளிகளிற்கு ஆங்கில வகுப்பு எடுப்பதில் இருந்து பெண் போராளிகளிற்கு பயிற்சி வழங்குவதில் இருந்து விடுதலைப் போட்டத்தைப் பற்றி யாராவது தவறாகக் கதைத்தாலோ அவர்களிற்கு எதிராக ஆங்கில வடிவத்தில் அறிக்கை எழுதி விடுவதில் இருந்து பலவழிகளில் எமது விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்திருக்கின்றார். 

இதே ஆண்டுதான் குமணன் இணைக்கப்பட்டார்.  அந்தக்காலத்தில் பன்றிகெய்தகுளம் பண்ணைக்குச் சோமண்ணன் பொறுப்பாக இருந்தார். அவருடன் பீரிஸ் ,மனோவாத்தி,மொட்டைப் பிறேம், ஆகியோர் அப்பண்ணைக்கு வந்துஇணைந்துகொண்டார்கள்.இப் பண்ணைக்கு தம்பி, செல்லக்கிளி, ஐயர், கலாபதி, மதி, குமணன் உரும்பிராய் பாலா, மாத்தையா, விசு ஆகியோர் வந்து போவார்கள். ஆனால் விசு ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களப் படைகளிடம் கைது செய்யப்படுகின்றார். இச்செய்தியை மாத்தையா அறிந்தவுடன் ஜயர்ருக்கு தெரியப்படுத்த ஐயர் அம்முகாமிற்கு வந்து இந்திரன், காந்தன் இருவரையும் மட்டக்களப்பு போய் டானியல் அவர்களின் தொடர்பில் இருக்குமாறு அனுப்பிவிடுகின்றார்.

அடுத்து ஏனையவர்களை ஐயர் கூட்டிச்சென்றதும்  அப்பண்ணை மூடப்பட்டது. இவர்கள் மட்டக்களப்பு சென்றதும் பிரபல வர்த்தகரான விஸ்வலிங்கம் உதவியுடன் தொப்பிகல பிரதேசத்தில் இரண்டாவது பண்ணை ஒன்றை அமைக்கின்றார்கள். இதற்கு டானியல் பொறுப்பாக உள்ளார். அங்கே காந்தன், றிசேச்சர், இந்திரன், மதி இவர்கள் அங்கே செயல்படுகின்றார்கள். அடுத்த பண்ணையாக மீயான்கல்குளம் அருகில் ஒரு பண்ணை இருந்தது. அங்கே நெல் பயிர் மேற்கொள்ளப்பட்டன. அங்கே பாம்பு மற்றும் முதலைஇவற்றில் இருந்து தான் மயிரிழையியில் தப்பியதாக அங்கே இருந்த மதி குறிப்பிடுகின்றார்.இதில்மேற்குறிப்பட்டாணியில் நிதிமோசடி காரணமாக தேசியத்தலைவரால் அதே காலத்தில் சாவொறுப்பு வழங்கப்பட்டது

பொட்டுஅம்மான்)1980 காலப்பகுதியில்தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.யோகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்;  அவர் நல்ல உணர்வான கருத்தை இளைஞர்கள் மத்தியில் சொன்னமையால் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அம்மான் மட்டும் பிளேட்ரால் தனது கையைக் கீறி இரத்தத்தால் பொட்டு வைத்தார். இதனால்தான் அவருக்கு பொட்டுஅம்மான் எனப் பெயர் உருவானது. அக்காலப் பகுதியில் ஈழப்போராளிகள் அரசிற்கு எதிராகப் பெரிய தாக்குதல்கள் எதையும் செய்யவில்லை. காரணம் கணிசமானவர்கள் ஜெயில் கைதிகளாக இருந்தார்கள். ஏனையவர்கள் பாதுகாப்புக் காரணங்களிற்காக இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்தார்கள். இதே காலப் பகுதியில்தான் பொட்டுஅம்மான் எமது அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பின் புலனாய்வுத் தலைவராகவும்; இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும்; இறுதிவரை கடமையாற்றினார்.

இவர் மிகவும்  நம்பிக்கையான ஒரு தலைவராகக் காணப்பட்டார். அதைவிட தலைவருக்கு மிகவும் விசுவாசமான தளபதியாகவும் கருதப்பட்டார். அது மட்டும் அல்ல இந்தியாவின் உளவுப் பிரிவின் மூளைச்சலவைக்கு ஆளாகி தலைவரைக் கொலை செய்ய மாத்தையா மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முறியடித்து தலைவரையும், இயக்கத்தையும் பாதுகாத்தார்.
அத்தோடு மட்டுமல்ல சிங்கள அரசால் தமிழீழம் மீது நடத்தத் திட்டமிடும் தாக்குதல்களை முன்கூட்டிய அறிந்து கொழும்பில் பல தாக்குதல்களையும் நடாத்தி அதை திசை திருப்பி தமிழீழத்தைப் பாதுகாத்தார்.தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பொட்டு அம்மானை  1982 ல் விடுதலைப் புலிகளின் மூத்தபோராளி காக்கா அண்ணையால் இனங் காணப்பட்டு எமது அமைப்பில் இணைக்கப்பட்டார். பின்னர் 83 நடுப்பகுதியில் உடையார் கட்டு இருட்டுமடுவில் நடந்த பயிற்சி முகாமில் அவர் பயிற்சி எடுத்தார்.
அவருக்கான பயிற்சியை தலைவர் நேரடியாக வழக்கினார். அடுத்து மட்டக்களப்பில் அருணா பொறுப்பாகயிருந்த காலத்தில் அங்கே கடமையாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில் இராணுவற்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வேளை  அங்கே ஒரு பெண்ணைக் காதலித்து பின் தலைவரின் அனுமதியுடன் அப்பெண்ணை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில்கட்டிக் கொண்டார். இயக்கத்தின் ஐந்தாவது திருமணமாக இது நிகழ்ந்தது.  இவருக்கு  மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவரின் கடைசிப்பிள்ளை இறுதி யுத்தத்தில் 4ஆம் மாதமளவில் எதிரிகளின் செல் தாக்குதலில் சாவடைந்தது; பின்னர் 2009 இல் இவருக்கு என்ன நடந்தத என்பதைப் பிறகு பார்ப்போம்.

அனைவருக்கும் வணக்கம்…! 

இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்வானது; இக்கதையை நாம் ஆவணப்படுத்திவந்தோம். ஆனால் வெளியிடுவதுற்கான தேவையேற்படவில்லை. இருந்தும் “மேதகு 2”  படம் வெளிவந்தபின்னர் அதில் பெண் போராளிகளின் இணைவு பற்றியோ; தலைவரின்  மெய்ப் பாதுகாவலர்கள் பற்றியோ; அவரின் நல்ல நடத்தைகள் பற்றியோ;  அதில் குறிப்பிடவில்லை. மாறாக அவர் ஒரு கொலைகாரன் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தார் .  அது சம்பந்தமாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது!  “உயிர் போனாலும் கதைத்தவரின் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்” என தெரியப்படுத்தினார். இன்னொருதரின் போன் நம்பர் அவர் தந்தார்.  அது வேலை செய்யவில்லை. இருந்தும்  பலர்” போன்” எடுத்து எமக்குக் காரசாரமாகப் பேசினார்கள். அது மட்டும்அல்ல படம் ஓடிய இடத்தில் என்னைப் பார்த்து ஒருதர் காறி முன்னால் துப்பினார். இளநீர் குடித்தவன் தப்பி விட்டான்;  கோம்பை சாப்பிட்டவன் சிக்கி விட்ட கதையாகவே இருந்தது. அதனால் நாம் இவ் ஆவணத்தை வெளியிட்டோம். இதில் ஏதாவது தவறு இருந்தாலும் ; அல்லது இணைக்கப்படாமல் சில கதைகள் இருந்தாலும் ; உங்களின் போன் நம்பருடன்  உங்களிற்கு தெரிந்த கதைகளை எழுதி கீழே குறிப்பிடும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.  இவ் ஆவணமானது தலைவரால் சொல்லப்பட்டு;  ஆரம்ப  இராணுவப் பயிற்சி            போராளிகளுக்குப் படிப்பித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகின்றேன்.  நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்____wwwtemlnews@gmail.com

அடுத்து குட்டி மனி தங்கத் துரைக்கு என்ன நடந்தது என்று இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்

தமிழீழ புத்தகத்தின் முன் அட்டை தொடர்பான கொள்கை விளக்கம்.                                                              01) மேலே எமது தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது,  இரண்டாவது ஒரு தனி மனிதனாக நின்று இறுதிவரை தான் வரைந்து கொண்ட கொள்கைக்காகத் தனது  அயராது.    உழைப்பினாலும் தனது தீவிரச் செயற்பாட்டாலும் தனது திறமையாலும் இளைஞர் யுவதிகளை ஒரு அணியில் இணைத்து 30 வருடமாகப் போராடி ஒரு தமிழீழ நடைமுறை அரசாங்கத்தை உருவாக்கிய தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரனின் அவர்களின் படமும் மற்றும் அவருக்கு ஆலோசகராகவிருந்த பாலா அண்ணையின் படம் இணைக்கப்பட்டுள்ளது, தேசியத் தலைவரே எமது விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டியும் தந்தையும் ஆவார்,

 02) அடுத்து தூயமான போராட்டம் என்பதை  குறிப்பதற்காக வெள்ளைக் கலர் இணைக்கப்பட்டுள்ளது, அடுத்து மேலே உள்ள சிகப்பில் இரு பக்கமும் கறை படிந்தது போல் உள்ளது, அது எமது போராட் வரலாற்றில் தேசியத் தலைவருக்குஎதிராகவும் அவரின் உயரிய கொள்கைக்கு எதிராகவிருந்த  துரோகங்களான ஆரம்பகால துரோகிகளான உமாமகேஸ்வரன் அடுத்து, மாத்தையா, அடுத்து யாழ்ப்பாணம் தொடர்பான தகவலை எதிரிக்குக் கொடுத்த ஒப்பிளாமணி, அடுத்து கேணல் சங்கர் அவர்களை கொலை செய்ய எதிரிக்கு உடந்தையாக இருந்த புஸ்ப்பன் இறுதியாக விடுதலை போராட்டத்தை முழுமையாகக்காட்டிக் கொடுத்த கருணா கேபி (KP) போன்றவர்களின் துரோகத்தை அக்கலர் குறிக்கின்றது,

03) அடுத்து தமிழீழக்கதை என்பதை ஆங்கிலத்திலும் அடுத்து அவர்களின் தாகம் தமிழீழத் தாயகம் அதற்காகவே தலைவர் உட்பட ஐம்பதினாயிரம் போராளிகள் தங்களின் உயிரை அர்ப்பணித்தார்கள் என்பதை அது குறிக்கின்றது

புத்கத்தின் பின்பக்கம் பற்றி விளக்கம்

01) மேலே நடுவில் தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்களது அடுத்து மேலே இருபக்கமும் தமிழீழத் தேசிய அடையாளங்களான சிறுத்தை, செம்பகம் உள்ளன, கீழே நெல் வயல்கள், பனை மரங்கள்உள்ளது அது தமிழீழத்தின் தேசிய வருமானத்தைக் குறிக்கின்றது

 02) கீழே இரு பக்கமும் தேசிய அடையாளங்களான கார்திகைப் பூ, வாகை மரம் இணைக்கப்பட்டுள்ளது அடுத்து ஐந்து பனை மரங்கள் அதற்கான காரணம் விடுதலைப் போராட்டம் முதலாவதாக யாழ் மாட்டத்தில உருவானது என்பதை குறிப்பதோடு நடுவில் உள்ள உயர்ந்த பனை தேசியத் தலைவரைக் குறிக்கின்றது அடுத்து பக்கத்தில் இருக்கும் இரு பனைகள் இரண்டாவது தலைமையாகவிருந்த லெப் சீலன் மற்றும் லெப் செல்லக்கிளி அம்மான் இருவரையும் குறிக்கின்றது. அடுத்து  பதிவான இரண்டு பனைகளும் இரண்டாவது தலைமையாகயிருந்த கேணல் கிட்டு மற்றும் பிரிகேடியர் பொட்டு அம்மானைக் குறிக்கின்றது, இரத்தம் சிந்திய எமது போராட்டம் என்பதை சிகப்பு குறிக்கின்றது தமிழீழம் கிடைக்கவில்லை அது எமது வாழ்நாளில் ஒரு இருள் சூழ்ந்த காலமாகவேயிருக்கும் என்பதை குறிப்பதற்காக தமிழீழ வரைபடத்தில் கறுப்பு இணைப்பட்டுள்ளது நிமலேஸ்வரன் மற்றும் குமரதேவன் இருபரும் உருவாக்கியுள்ளனர் இதை மூத்தபோராளி காந்தன் சரிபார்த்துள்ளார்,

தொடரும்

அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “a 683 தமிழிழீழக்கதை Tamil Eelam of storyதமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *